All India Ayurveda Congress - Doctor Registration

Article Details

Article Details

டாக்டர் டி.வி.நாராயணன்.,D.A.M.,

சிறு துளியாய்


சொட்டு பாசனம் என்று கேள்விப்பட்டிருப்பீர். ஆங்கில மருத்துவத்தில் DRIPS என்பது
அதுதானே. நமக்கு முகுர் முகுர் விஷ சர்த்தி ஹித்மா ஆகிய நோய்களில் சிறிதளவில்
உணவும் மருந்தும் உபயோகிக்க வேண்டும் என்று நம்முடைய மருத்துவத்தில்
கூறப்பட்டுள்ளது. இந்த முறை பல சந்தர்ப்பத்திலும் நல்ல குணம் செய்வதாக
அனுபவம் உண்டு.ஸமீப காலமாக கிட்னி பாதிப்பும் அதிகமாக காணப் படுகிறது
.ஜலம் அல்லது திரவம் குறைந்த அளவில் பருக வேண்டும் என்று சொல்ல
வேண்டியது. பல சந்தர்ப்பத்திலும் நோயாளி இதற்கு ஒத்துப் போக முடியாமல்
நினைத்தபடி செயல்படுகிறார்கள். இது பல விளைவுகளை ஏற்படுத்தும் .அதற்கு
என்னுடைய வைத்தியத்தில் முதலில் சொன்ன சொட்டு பாசனம் நன்றாக உள்ளது.
ஜலம் அல்லது திரவங்கள் மிகக்குறைந்த அளவி்ல் அடிக்கடி சாப்பிடுவது. உதாரணம்-
கிட்னி பாதிப்பில் CREATININE கூடுதலாக இருந்து சோகை இருந்தால்- புனர்நவாதி
கஷாயம், பிரகத்யாதி கஷாயம், தசமூலம் கஷாயம் ஆகியவை பானமாக
பயன்படுத்தலாம். தன்வந்தரம் குளிகை சேர்த்து சாப்பிடுவது வாத அனுலோமத்திற்கு
உதவும்.
இருமல், மூச்சு திணறல்,விஷபாதை, வாந்தி, விக்கல், தண்ணீர் தாகம் ஆகிய
நோய்களுக்கும் இதுதான் நல்லது.ஹித்மா என்றும் விக்கல் வியாதியில் - இந்துகாந்தம்
கஷாயம், இந்துகாந்தம் கிருதம், தான்வந்தரம் குளிகை, விதார்யாதி கஷாயம்,
விதார்யாதி கிருதம், தசமூலம் கஷாயம் உடன் வாயு குளிகை கலந்து உட்கொள்வது
மிகசிறப்பான பலனை தருகின்றது.
பொதுவாகத்தான் சொல்ல முடியும், ஒவ்வொரு நோயாளியும் மாறுதலான குணங்கள்
உடையவர்கள்.இதே மருந்துகள் அனைவருக்கும் என்று சொல்ல முடியாது. நல்ல
ஆயுர்வேத மருத்து வரிடம்ஆலொசனைப்பற்றுநோயாளிகள் பயனடைய வேண்டும்.