Article Details
Dr.Deivanai
ஆறடி உடலின் இயக்குநர் எந்த உறுப்பு எனும் கேள்விக்கு பதில் இதயம், மூளை, நுரையீரல் என்று பல
பதில்கள் வரலாம் ஆனால் சிறிதும் நம் ஞாபகத்துக்கு வராத உறுப்பு கல்லீரல். ஆனால் இந்த கேள்விக்கு
சரியான விடை கல்லீரல் ஆகும். கல்லீரல் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்து எல்லா உறுப்புகளும்
செயலாற்ற உறுதுணை புரிகிறது.
கல்லீரலின் வேலைகள்
இரத்த அணு உற்பத்தி
நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதல்
ஆகார ரஸத்தை சக்தியாக (குளுக்கோஸ்) பரிணமிப்பது.
அதிகப்படியான குளுக்கோஸை க்ளைகோஜனாக மாற்றி சக்தியை சேமிப்பது.
சேமித்த க்ளைகோஜனை தேவைக்கேற்ப சக்தியாக மாற்றி தருவது
அதீத க்ளைகோஜனை கொழுப்பாக மாற்றி சேமிப்பது
புரதம் பரிணாமத்தின்போது உருவாகும் அமோனியா எனும் நச்சுப்பொருளை யூரியாவாக மாற்றி
சிறுநீர் மூலம் வெளியேற்றுவது
தைராய்டு, அட்ரீனல் போன்ற நாளமில்லா சுரப்பிகளின் அதீத சுரப்புகளை அழிப்பது
அனாவசியமான மருந்துகள் , தீய பழக்கங்கள் , விஷங்கள் முதலியவற்றை செயலிழக்கச் செய்வது
பாலின சுரப்புகளை சமநிலை படுத்துதல் மூலம் உடலுறவில் ஈடுபாடு குறைவு அல்லது காம வெறி
ஏற்படுதலை கட்டுக்குள் வைத்திருப்பது
இதயம் துடித்து இயங்குவதற்கு
இரத்தக்குழாய்களை பராமரிப்பது
உண்ணும் உணவு செரிப்பதற்கு
மூளையின் முனைப்பிற்கும்
தசையின் வளம் மற்றும் வலிமைக்கு
உடலை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமைவது
இதையே ஆயுர்வேதத்தில் சுருக்கமாக கல்லீரலின் பெயரிலேயே குறிப்பிட்டுள்ளனர் யக்ருத் இதன்
அர்த்தம் எது செயலை செய்கிறதோ அது யக்ருத் ஆகும். நாம் உட்கொள்ளும் ஆகாரத்தை உடல்
கூறாக மாற்றம் செய்வதே செரிமானம் இது முழுமையாக நடைபெற ஒரு தொழிற்சாலையாக
பணியாற்றுவது கல்லீரல் ஆகும் எனவே எந்த உடல் உபாதை ஆனாலும்அதை முடிந்த அளவு
கல்லீரல் சரி செய்ய நடவடிக்கை எடுக்கும் முடியாத நிலையில் நோயாக வெளிப்படுத்தும்
அந்நோய்க்கான மருந்து வேலை செய்வதற்கும் தேவையற்ற பக்கவிளைவுகளை தடுக்கவும்
கல்லீரல் சீராக இயங்குவது அவசியமாகும். ஆயுர்வேதத்தின் படி பித்த ஸ்தானமே
செரிமானத்திற்கும் வளர்சிதை மாற்றத்திற்குமான திரவங்களை உற்பத்தி செய்கின்றன. கல்லீரல்
சுரப்பிகளின் தாயாகக் கூறப்படுகிறது. எவ்வாறு ஒரு தாய் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து
வேலைகளையும் கண்காணித்து உதவி செய்வாளோ அது போல் உடலின் மற்ற உறுப்புகளை
கண்காணித்து அவற்றின் அதீத பளுவை தன்னால் இயன்ற அளவு தோள்கொடுத்து சமாளிக்க
உதவும் கல்லீரல். கல்லீரல் பாதுகாப்புக்காக நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானதாக இருப்பது
த்ரயோபஸ்தம்பங்களே அதாவது ஊண், உறக்கம், பிரம்மச்சரியம்/ கிரகஸ்தாஷ்ரம். உணவு என்று
பார்க்கும்போது சரியான நேரத்தில், தேவையான அளவில், தரமான முறையில் உண்டாக்கிய
காலத்திற்கு உகந்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதோடு தேவையான அளவு நீர்
பருகுவதுமே நாம் சிரத்திக்க வேண்டியவைகள். இரண்டாவதாக உறக்கம் சரியான நேரத்தில்
உறங்கச்செல்வது, சாதாரணமாக சூரிய அஸ்தமனத்திற்குப்பின் இருள் சூழும் சமயம் நம்
உடலிலும் உறக்கத்தை தூண்டும் மெலடோனின் சுரப்பி திரவங்களை சுரக்கத் துவங்குகின்றன.
இது இயற்கையாக நடக்கும் விஷயம் இதை நாளடைவில் நம் தேவைக்கேற்ப உறங்கும் நேரத்தை
நாமே மாற்றி பின் தூக்கமின்மைக்கு நாமே காரணமாகிறோம். இதனால் நடு நிசியில் பித்த
காலத்தில் உடலில் சேரும் நச்சுக்கழிவுகளை வெளியேற்ற உழைக்கும் கல்லீரலின் பணிக்குத்
தடைக்கல்லாக அமைந்து உடலில் கழிவுகள் தேங்கி விடுகின்றது. இறுதியாக பிரம்மச்சரியம் இதை
முறையாகக் கடைபிடித்தால் எந்த தீய பழக்கவழக்கததிற்கும் அடிமையாகாது நல்ல தேக
ஆரோக்கியத்துடன் வாழலாம். கிரஹஸ்தர்கள் முறையான தாம்பத்யத்தை, ஒழுக்கமான முறையில்
தனக்கென்று உரியவர்களுடன் மட்டுமே ஈடுபட வேண்டும் மேலும் இரவு உணவிற்கும்
தாம்பத்யத்திற்கும் போதுமான கால இடைவெளி இருக்க வேண்டியது அவசியம். எனவே
தாய் உறுப்பான கல் லீரலை சரியான உணவு பழக்கவழக்கங்களாளும் தேவையற்ற பழக்கங்களை
தவிர்ப்பதன் மூலமாகவும் காத்திடலாமே.
வரும்முன் காப்போம் வளமாக வாழ்வோம்.