Article Details
Dr ராகவேந்திரன், MD (Ayu)
முதுகு தண்டுவட நோய்களும் ஆயுர்வேத தீர்வுகளும்:
ஆயுர்வேத மருத்துவர்: வணக்கம் லக்ஷ்மணன். உங்களுக்கு என்ன தொந்தரவு?
லக்ஷ்மணன்: எனக்கு கடந்த இரண்டு மாத காலமாக இடுப்பிலிருந்து கால் வரை வலி உள்ளது.
நடக்கவே சிரமமாக உள்ளது. நான் ஒரு மருத்துவரை பார்த்தேன். அவர் MRI ஸ்கேன் எடுத்து
பார்த்துவிட்டு இந்த வலிக்கு காரணம் இடுப்பில் உள்ள நரம்பு தான் காரணம் என்றார். இதற்கு
ஒரே தீர்வு முதுகு தண்டு வடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார். எனக்கு
ஆபரேஷனை நினைத்தால் பயமாக உள்ளது.
மருத்துவர் லக்ஷ்மணனை பரிசோதனை செய்து பார்க்கிறார்.
மருத்துவர்: உங்களுக்கு உள்ள வியாதியை சயாடிகா (Sciatica) என்று கூறுவார்கள்.
ஆயுர்வேதத்தில் இதனை கிருத்ரசி (Grudrasi) என்று அழைப்போம். இந்த வியாதி வாத தோஷம்
அதிகரிப்பதால் உருவாகிறது.
லக்ஷ்மணன்: இந்த வியாதிக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு உள்ளதா?
மருத்துவர்: ஆயுர்வேதத்தில் கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி
வலி, கை கால்களில் நரம்பு இழுக்கும் வலி ஆகிய அனைத்தும்
வாத நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அனைத்து
நோய்களுக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் நல்ல தீர்வளிக்க
முடியும்.
லக்ஷ்மணன்: இந்த வாத நோய்களுக்கு எந்த மாதிரியான
சிகிச்சை முறைகள் உதவுகின்றன?
மருத்துவர்: வாதம் என்பது வறட்சியை குறிக்கிறது. எழும்பு,
தசை மற்றும் நரம்புகளில் காணப்படும் இது போன்ற வாத
நோய்களுக்கு பல விதமான உள்மருந்துகளும் அதனுடன் வலி உள்ள இடங்களில் எண்ணை
மருந்துகளை தடவுதல் மூலமாகவும் நாம் எதற்கும் நல்ல தீர்வளிக்க முடியும்.
லக்ஷ்மணன்: உள்ளே எந்த விதமான மருந்துகள் நீங்கள் தருவீர்கள்?
டாக்டர்: கஷாயம், அரிஷ்டம், மாத்திரை, பொடி, லேகியம் போன்ற பல வகை இயற்கை
மூலிகை மருந்துகள் உள்ளன. உங்களுடைய வாதத்திற்கு சில கஷாயங்களும் மாத்திரைகளும்
தருவேன்.
லக்ஷ்மணன்: வெளியில் எந்த விதமான சிகிச்சைகள் செய்வது நல்லது?
மருத்துவர்: முதுகு தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணை குளியல், பொடிகிழி, இலைகிழி,
பிசு, கடிவஸ்தி, மூலிகை பற்று, எண்ணை வஸ்தி, கஷாய வஸ்தி போன்ற பலவகை சிகிச்சை
முறைகள் உள்ளன. ஒவ்வொருவருடைய வியாதியை பொருத்து எந்த விதமான சிகிச்சை
முறைகளை அளிக்க வேண்டும் என நாங்கள் தீர்மானிப்போம். அதற்காக பலவித மூலிகைகளை
கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவோம்.
லக்ஷ்மணன்: இதற்கு ஏதேனும் பத்திய முறைகள் உள்ளனவா?
மருத்துவர்: ஆயுர்வேத மருந்துகளுக்கு பத்தியம் கிடையாது. நான் உங்களுக்கு விளக்கியதை
போல, இந்த வியாதி வாத தோஷம் அதிகரிப்பதால் உருவாகிறது. ஆகவே, வாதத்தை
அதிகரிக்கும் உணவுகளையும் தினசரி நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு
செய்வதால், இந்த வியாதி மீண்டும் வராமல் தடுத்து கொள்ள முடியும்.
லக்ஷ்மணன்: மிகத்தெளிவாக விளக்கினீர்கள். எனக்கு ஆயுர்வேத மருத்துவ முறைகளே
போதுமானது. நீங்கள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டால் இந்த வியாதி குணமாவது
மட்டுமல்லாது வேறு வியாதிகள் வராமலும் தடுத்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு
வந்துள்ளது. மிக்க நன்றி டாக்டர்.